வாழைச்சேனை அல்-மினா கழகம் சம்பியன்

அட்டாளைச்சேனை ஆலம்குளம் அல்–-அக்சா விளையாட்டுக் கழகத்தின் 18ஆவது வருட நிறைவினை முன்னிட்டு அணிக்கு 8பேர் 5 ஓவர் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் முன்னணிக் கழகங்கள் பங்கு கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை அல்-–மினா கழகம் சம்பியனாகியது.

அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.அனுசரணையுடன் ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை எவ பிரைட் கழகத்திற்கும் வாழைச்சேனை அல்-–மினா அணியினருக்குமிடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அல்-மினா அணியினர் குறிப்பிட்ட 5 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழற்பிற்கு 55 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு வெற்றி பெற துடுப்பெடுத்தாடிய எவ பிரைட் கழக அணியினர் 5 ஓவர் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 18 ஓட்டங்களால் இச்சுற்றுப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாமிடத்தைத் தனதாக்கிக் கொண்டனர்.

வெற்றி பெற்றுச் சம்பியனான அல் -மினா விளையாட்டுக் கழகத்தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்துடன் 12ஆயிரம் ரூபாப் பணத்தினை நிகழ்வின் பிரதம அதிதி அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.தலைவர் எம்.ஐ.முகம்மட் றியாஸ் வழங்கி வைத்ததுடன் இரண்டாமிடம் பெற்ற எவபிரைட் கழகத்தலைவரிடம் கிண்ணம் மற்றும் 10ஆயிரம் ரூபாப் பணத் தொகையினையும் நிகழ்வின் கௌரவ அதிதி அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.கே.முகம்மட் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் றஹ்மானியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.உபைத்துல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை