அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் பதற்றம்

ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலில் ஒரு நுழைவாயிலில் நேற்று ஏற்பட்ட இழுபறியை அடுத்து பலஸ்தீன வழிபாட்டாளர்களை கலைப்பதற்கு இஸ்ரேலிய பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதோடு ரப்பர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஒன்றி திரண்டிருந்தனர்.

நேற்று யூதர்களின் புனித தினமான டிஷா பிவாகவும் இருந்தது. இந்த தினத்தில் வழக்கமாக யூதர்கள் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான இந்த பள்ளிவாசல் வளாகத்திற்கு வெளியில் இஸ்ரேலிய பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பலஸ்தீனர்கள் “எமது ஆன்மா, இரத்தத்தைக் கொண்டு அல் அக்ஸாவை மீட்போம்” என்று கோசமெழுப்பினர்.

எனினும் பள்ளிவாசல் வளாகத்திற்குள் யூதர்கள் நுழைவதை பொலிஸார் தடுத்ததை அடுத்து பதற்றம் தணிந்தபோதும் அவர்களை அனுமதிப்பார்கள் என்ற பயத்தில் தொடர்ந்து பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை