ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்பு: 95 பேருக்கு காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 95 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்குக் காபுலில் நேற்றுக் காலை 9 மணி அளவில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் ரஹிம் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் நிலைத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்த குண்டே வெடித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பொதுமக்களை பெரும்பான்மையாகக் கொண்ட குறைந்த 95 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பால் தலைநகரில் பாரிய புகை மூட்டம் ஏற்பட்டது. “பெரும் சத்தத்தை கேட்டேன். ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின” என்று கடை விற்பனையாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு விபரித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ‘

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையிலும் தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலுமே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை