தரம் ஐந்து புலமைப்பரீட்சை: கல்முனை கல்வி மாவட்டத்தில் 8539 மாணவர்கள் தோற்றம்

கல்முனை கல்வி மாவட்டத்தில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (04) சுமுகமாக நடைபெற்றது. இங்கு 76 பரீட்சை நிலையங்களில் 8539 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

பரீட்சைகளுக்கான பிராந்திய மேற்பார்வை அதிகாரியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைறூஸ்கான் கடமையாற்றியதுடன்,சேகரிப்பு நிருவாக அதிகாரியாக ஏ.ஜி.பஸ்மில் கடமையாற்றினார்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் அதிகமான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற வருகை தந்திருந்தனர்.

பரீட்சை நிலையங்களுக்குள் பெற்றோர் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இங்கு பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை