84 வறிய குடும்பங்களுக்கு இலவச வீடுகள் வழங்கல்

சப்ரகமுவ மாகாண சபையின் 'எமது வீடு' வேலைத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 84 எளிய குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளை அமைத்து கொடுக்க சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி 84 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் வெவ்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் இடம்பெற்றது.

அதற்கமைய சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான யெஹியா எம். இப்ளார் மற்றும் சமித்த ஆட்டிகலை ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்நிகழ்வில் சபரகமுவ மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலனி, முதலமைச்சரின் செயலாளர் சந்திராணி, இரத்தினபுரி பிரதேச செயலக அபிவிருத்தி அதிகாரி ருவன் சம்பத் பேமச்சந்திர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சபரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி,கேகாலை ஆகிய இரு மாவட்டங்களில் ஒரு பிரதேச செயலகப்பிரிவில் 3 வீடுகள் என்றடிப்படையில் மொத்தம் 28 பிரதேச செயலப்பிரிவுகளிலும் 84 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி என்றடிப்படையில் மாகாணசபை 3 கட்டங்களாக நிதி உதவி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி தினகரன் நிருபர்

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை