ஜப்பானில் கடும் வெள்ளம்: 6 இலட்சம் பேர் பாதிப்பு

ஜப்பானில் நீடித்து வரும் கனமழையால் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக 6,70,000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சாகா, புகுயோகா, நாகசாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாகாவில் ரயில் நிலையங்கள், வாகனங்கள் ஆகியன நீரில் மூழ்கி உள்ளன. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவிற்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஓகஸ்ட் 30 வரை மேற்கு முதல் வடக்கு ஜப்பான் பகுதிகளில் கனமழை தொடரும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடங்கி உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை