6 குற்றங்களடங்கிய அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிப்பு

லசந்த, தாஜுதீன், எக்ெனலிகொட படுகொலை உட்பட

பதில் பொலிஸ் மாஅதிபர் கையளித்தார் கீத் நொயார் விசாரணை விரைவில் நிறைவு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவிக்கரமதுங்க, ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைகள் உள்ளிட்ட, சர்ச்சைக்குரிய ஆறு குற்றங்கள் தொடர்பான அறிக்கை நேற்று சட்ட மாஅதிபர் டப்புல்ல டி லிவேராவிடம் கையளிக்கப்பட்டது.

பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன இதனைக் கையளித்தார்.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி சட்ட மாஅதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அறிக்ைக கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ரகர் விளையாட்டு வீரர் தாஜுதீன் படுகொலை, தொண்டர் சேவை உத்தியோகத்தர்கள் 17 பேர் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையே சட்ட மாஅதிபரிடம் கையளிக்கப்பட்டது. குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தினால் மேற்படி குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, இரண்டு மாதங்களுக்குள் கீத் நொயார் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை நிறைவுசெய்ய முடியுமென குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் ஏனைய குற்றங்கள் தொடர்பான விசாரணையை நிறைவுசெய்யும் காலகட்டம் தொடர்பில் உடனடியாக தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலத்திற்குப் பின்னரே மேற்படி குற்றங்கள் தொடர்பான விசாரணைகள், குற்றத்தடுப்பு திணைக்களத்திற்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட தைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த விமர்சனங்களின் தன்மை மற்றும் விடயங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். இவ்விசாரணைகள் சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமையவே இடம்பெற் தென்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விசாரணைகள் முடிவுறும் திகதியை குறிப்பிட முடியாதுள்ள போதும் நீண்டகாலமெடுக்காது விரைவில் முடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை