டெங்கு தீவிரம் 62 பேர் உயிரிழப்பு

தொடர்ச்சியான மழை யுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

இந்த வருடத்தின் கடந்த எட்டு மாத காலப்பகுதியில்

டெங்குக் காய்ச்சலால் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40,649 பேர் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு விசேட மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதே உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைவதாகவும் இதுவரையான காலப்பகுதியில் 40, 000க்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் 58 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளனர்.இம்முறைகடந்த எட்டு மாத காலப்பகுதியில் டெங்குக் காய்ச்சலால் 62 பேர் உயிரிழந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு,கம்பஹா,களுத்துறை,இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலேயே டெங்குக் காய்ச்சல் அதிகரித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ்

செல்வநாயகம்

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை