Header Ads

தன்சானியாவில் எரிபொருள் லொரி வெடித்து சிதறியதில் 62 பேர் பலி

தன்சான்யாவில் எரிபொருள் ஏற்றி வந்த லொரி வெடித்து சிதறியதில் 62 பேர் பலியாகினர்.

அந்நாட்டின் துறைமுக நகரமான டார் எஸ் சலாமிலிருந்து, சரக்கு மற்றும் எரிபொருட்கள் லொரிகளில் ஏற்றி, அங்கிருந்து 200 கிலோ மீற்றர் மேற்கில் உள்ள மோரோகோரா வழியாக ஏனைய பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை எரிபொருள் ஏற்றி சென்ற லொரி ஒன்று துறைமுகத்திலிருந்து மோரோகோரா பகுதி வழியாக சென்றபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் வீதியில் வழிந்துகொண்டிருந்த எரிபொருளை தொட்டியில் நிரப்ப அதன் அருகில் சென்றுள்ளனர். ஆனால் லொரி கவிழ்ந்த சில நிமிடங்களிலேயே அது பலத்த சத்தத்துடன் வெடித்து வானில் கரும்புகையை வெளியேற்றியது.

இந்த கோர விபத்தில் வாகனங்களில் பயணித்தவர்கள் உட்பட 62 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 70 பேர் காமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றி வரும் பொலிஸார், பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், இதேபோன்ற வீதி விபத்தில் எரிபொருள் லொரி வெடித்து சிதறியதில் 45 பேர் உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடுகளில் லொரிகளில் இருந்து கொட்டும் எரிபொருளை கள்ளத்தனமாக தொட்டிகளில் நிரப்ப பலரும் செல்வதால் அவ்வாறான விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.