சூடானில் பழங்குடியினர் மோதல்: 37 பேர் பலி

கிழக்கு சூடானில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் 37 பேர் கொல்லப்பட்டு மேலும் 200 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சூடானின் செங்கடல் மாநில தலைநகர் மற்றும் சூடானின் பிராதான துறைமுக நகரில் பானி அமிர் மற்றும் நூபான் பழங்குடியினருக்கு இடையே கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சூடானின் பல மாநிலங்களிலும் பழங்குடியினருக்கு இடையிலான மோதல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. குறிப்பாக மார்பூரின் மேற்குப் பிராந்தியம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை