குடிநீர்த் திட்டங்களுக்கு ரூபா 350 பில்லியன் முதலீடு

-குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் 350 பில்லியன் ரூபா நிதி முதலீடுசெய்யப்பட்டுள்ளதாக நகரதிட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் 350 பில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கும் கருத்திட்டங்களை ஆரம்பித்துத்துள்ளதுடன் இவற்றில் சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஏனைய கருத்திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

கண்டி,கட்டுகஸ்தோட்டை நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர் :

பாத்ததும்பர கருத்திட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதும் ஹரிஸ்பத்துவ, பாததும்பர, யடிநுவர மற்றும் கலகெதர முதலான தொகுதிகளில் வசிக்கும் சுமார்

4 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

இதற்காக சீன எக்ஸிம் வங்கி 50 ஆயிரம் மில்லியன் ரூபாய்களைவ ழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் குண்டசாலை- ஹாரகம நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவிருப்பதுடன் சீன எக்ஸிம் வங்கி இதற்கான நிதி இலகுகடன் திட்டத்துக்கு அமைவாகவே வழங்க முன்வந்துள்ளது.

இதற்காக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர்,சீனமுதலீட்டு வங்கியின் தலைவர் ஆகியோருக்கும் சீனஅரங்கத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இது தவிர தற்போதுவட மேல்மாகாணத்தின் சனத்தொகையின் அரைவாசிக்கும் அதிகமான மக்களும் மத்தியமாகாணம்,வடமாகாணம் முதலான பல்வேறு மாகாணங்களிலும் இலட்சக் கணக்கான மக்களும் நன்மையடையவுள்ளனர்.

இன்னும் முதன் முறையாக கடல் நீரிலிருந்து குடிநீரை உற்பத்திசெய்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை