சவப்பெட்டிக்குள் 300 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி

கொலம்பியாவில் சவப்பெட்டிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகம் விளைவிக்கப்படும் நாடாக கொலம்பியா உள்ளது. இங்கு சட்டவிரோதமாகவும் சிலர் கஞ்சா பயிரிட்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.

அந்தவகையில் அண்மையில் பாம்லோனா குக்கூட்டா வீதியில் உள்ள சோதனை சாவடியில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தவே காரை ஓட்டி வந்தவர், காருக்குள் சவப்பெட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் சவப்பெட்டியை தனி நபர் எடுத்து செல்வதால் சந்தேகமடைந்த பொலிஸார் அதனை திறந்து சோதனையிட்டதில் பொட்டலம், பொட்டலமாக 300 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த கார் ஓட்டுநரை கைது செய்துள்ள பொலிஸார் கடத்தல் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை