கிழக்கு சீனாவில் புயலால் 28 பேர் பலி: பலர் மாயம்

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரையோர நகரங்களை ‘லேகிமா’ புயல் தாக்கியதில் 28 பேர் உயிரிழந்ததோடு மேலும் 20 பேர் காணாமல்போயுள்ளனர்.

ஷங்காய் மற்றும் ஸேஜியாங் மாநிலங்களில் புயலை முன்னிட்டு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் புயலால் 3,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

ஸேஜியாங்கிற்குள் கடந்த சனிக்கிழமை காலை நுழைந்த லேகிமா புயலின் தீவிரம் தணிந்திருப்பதாக சீனாவின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த போது கனமழையும் கொட்டித்தீர்த்ததோடு, பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஆறு ஒன்றின் குறுக்கே ஏற்பட்ட நிலச்சரிவால், ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் திசைமாறி ஆற்றங்கரையோர வீடுகளுக்குள் புகுந்தது. மழையின் காரணமாகவும் பல இடங்கள் வெள்ளக்காடாகின. வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை