25 வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

இளம் மாதர் அமைப்பினால் வருமானம் குறைந்த மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு டட்டோ ஹுஸைன் ஞாபகார்த்த புலமைப்பரிசில் சுமார் 25 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை (24) தெமடகொட, வை.எம்.எம்.ஏயின் தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதன்போது வறிய குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு அவர்களின் சுயதொழிலை மேம்படுத்த பெறுமதியான தையல் இயந்திரங்களும் அங்கவீனமுற்ற தேவையுடைய இருவருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இளம் மாதர் அமைப்பின் தலைவி தேசமான்ய பவாஷா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான மலேசியாவின் உயர் ஸ்தானிகர் டன் யன் தாய் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக உயர் ஸ்தானிகரின் துணைவியார் திருமதி டன் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஹைரீ ஸாஹிடா அமன் ஷா, லைலா பவுண்டேசனின் தலைவர் கலாநிதி ஹரிஸ்டீன், இளம் மாதர் அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக், அமைப்பின் உதவித் தலைவர் மர்லியா சித்தீக் உட்பட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை