நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறுவர்களின் எச்சங்கள் மீட்பு

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து 227 குழந்தைகளின் உடல்களை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியுள்ள ஹூவான்சாகோ பகுதியில் கடந்த ஒரு வருடமாக தொல்லியலாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் சிமு நாகரிகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் 227 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்ட நரபலி என தலைமை தொல்லியலாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார். 4 முதல் 14 வயதிலான குழந்தைகள் கி.பி ஆயிரத்து 200ல் இருந்து ஆயிரத்து 400 ஆண்டுக்குள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தலைமுடி, தோல்களுடனும் ஒருசில உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எல் நினோ எனப்படும் மோசமான வானிலையை எதிர்கொள்ள நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தோண்டத் தோண்ட குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதால் உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை