லீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்

கிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 20 இற்கு 20 மட்டுப்படுத்தப்பட்ட லீமெரிடியன் – பிரேவியன் சமர் 2019 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடரின் முதல் சுற்றில் மூதூர் யங் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் முன்னணியில் உள்ளது.

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் சிரேஸ்ட ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் சுற்றுப்போட்டி இடம்பெற்று வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 32 விளையாட்டுக் கழகங்கள் இச்சுற்றுத் தொடரில் 63 போட்டிகளில் பங்கேற்கின்றன.

மூதூர் யங் ரயன்ஸ் விளையாட்டுக்கழகம் நிந்தவுர் முத்தகீம் விளையாட்டுக்கழகத்துடனான போட்டியின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவுர் முத்தகீம் விளையாட்டுக்கழகம் 17.0 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மூதூர் யங் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் 15.5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. இப்போட்டியில் சிறப்பாட்டக்காரராக மூதூர் யங் லயன்ஸ் விளையாட்டுக்கழக வீரர் முஹம்மட் சுஜாத் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியின் போது கல்முனை டொப்பாஸஸ் மூதூர் யங் ரயன்ஸ் விளையாட்டுக்கழகத்துடனான போட்டியில் மூதூர் யங் ரயன்ஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திமே பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது. இப்போட்டியில் சிறப்பாட்டக்காரரக மூதூர் யங் லயன்ஸ் விளையாட்டுக்கழக வீரர் முஹம்மட் முஸ்னி தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விஞ்ஞான பீட பீடாதிபதியும் , ஓமான் சுல்தான் காபுஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியருமான ஏ.எம்.றஸ்மி கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

 (மாளிகைக்காடு குறூப் நிருபர்)

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை