தொழில்நுட்ப கல்லூரிக்கே 2013 இல் அனுமதியளித்தோம்

பற்றி ​ெகம்பஸ் முற்றாக மாறியுள்ளது

2013 இல் நாம் அனுமதி வழங்கிய பல்கலைக்கழக கல்லூரிக்கும் தற்போதைய பற்றி ​ெகம்பஸுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. பற்றி ​ெகம்பஸுக்கு 2015 ஆம் ஆண்டின் பின்னரே அனுமதி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும(ஜ.ம.சு.மு) தெரிவித்தார்.

பற்றி ​ெகம்பஸ் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும்

கூறியதாவது, மகாவலி காணியை டளஸ் அலஹப்பெருமவுடன் இணைந்து ஹிஸ்புல்லா தவறாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில், திறன் அபிவிருத்திக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாடு பூராவும் தனியார் துறையுடன் இணைந்து பல்கலைக்கழக கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.

அதில் 6 கல்லூரிகள் 2013/14 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.இதன் பிரகாரம் காத்தான்குடியிலும் பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கவே இந்த பல்கலைக்கழக கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் பற்றிகம்பஸ் தொடர்பான சகல நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இவை இரண்டும் வெவ்வேறாகும். பற்றி கெம்பஸ் அமைக்க 2015 ஜூன் 14 ஆம் திகதியே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.இது தனியார் நிறுவனமாக 2016 இல் பதியப்பட்டுள்ளதோடு 2017 இல் முதலீட்டு சபையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.எனவே பல்கலைக்கழக கல்லூரியையும் இதனையும் ஒன்றாக கருதி எம்மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்தவேண்டும்.

பல்கலைக்கழக கல்லூரியூடாக 2013 முதல் 2016 வரை 168 பேருக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் நேர்மையாக நடந்துள்ளார்.அதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அசூ மாரசிங்க எம்.பி

2012 ஏப்ரல் மாதம் இவரின் ஹீரா மன்றத்தை அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்ய முடியாது என அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் மறுத்துள்ளது.

டளஸ் அலஹப்பெரும எம்.பி

அவ்வாறாயின் ஏன் 2016 இல் அவ்வாறான பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கினீர்கள்.

அசூ மாரசிங்க எம்.பி

நாம் எந்த அனுமதியும் வழங்கவில்லை.முதலீட்டு சபை அனுமதி வழங்கினாலும் உயர்கல்வி அமைச்சு அனுமதி வழங்கவில்லை. ஹிஸ்புல்லா எம்.பியாக இருந்தது தவறு என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

டளஸ் அலஹப்பெரும எம்.பி

அவர் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தார். அவ்வாறு எம்.பியாக செயற்பட்டது பாரதூரமானது என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை