திருகோணமலையில் 200 ஏக்கர் காணி உப்பு உற்பத்திக்காக விடுவிக்கப்பட வேண்டும்

திருகோணமலை, உப்பூறல் கரையோரப் பகுதியிலுள்ள காணிகளில் சுமார் 200 ஏக்கர் காணிகள் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட வேண்டுமென, பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட, சேருவில பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் முஜீப் தலைமையில், சேருவில பிரதேச சபை மண்டபத்தில், நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து, நாட்டின் அந்நியச் செலவாணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான ஏற்றுமதி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, உப்பூறல் கரையோரப் பகுதியிலுள்ள காணிகளில் உப்பு உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் சேருவில, ஈச்சிலம்பற்று, மூதூர் போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான யுவதிகள் இதனால் நன்மையடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை