டி20 இல் 7 விக்கெட் வீழ்த்தி தென்னாபிரிக்க வீரர் சாதனை

இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட் டி20 தொடரில் பர்மிங்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

வோர்விக்ஷயர் கிரேஸ் சாலையில் நடந்ந டி20 போட்டியில் பர்மிங்ஹாம் -லீஸ்செஸ்டெர்ஷைர் அணிகள் மோதின. இதில், லீஸ்செஸ்டெர்ஷைர் அணி வெற்றி பெற்றது.

லீஸ்செஸ்டெர்ஷைர் அணியில் விளையாடிய தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கொலின் அக்கர்மன், 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதுமட்டுமின்றி டி20 போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு கிளாமோர்கனுக்கு எதிராக சோமர்செட் அணி மோதிய போட்டியில் மலேசிய பந்து வீச்சாளர் அருள் சுப்பையா 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது முந்தைய உலக சாதனையாக இருந்தது.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை