20க்கு 20 கிரிக்கெட்டில் ரிக்கி பொண்டிங்கின் 14 வருட கால சாதனையை முறியடித்த கனடா வீரர்

20க்கு20 அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பொண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார் கனடா வீரர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங். 20க்கு20 அறிமுக போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 2005-ல் 98 ஓட்டங்கள் குவித்தார். இதுதான் 14 வருட கால சாதனையாக இருந்தது. இந்நிலையில் 20க்கு20 உலகக் கிண்ணத்துக்கான தகுதி தொடரில் கனடா அணி கெய்மன் தீவு அணியை எதிர்கொண்டது. இதில் கனடா அணியைச் சேர்ந்த 48 பந்தில் ஆறு பவுண்டரிகள், 10 சிக்சருடன் 101 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் என்ற ரிக்கி பொண்டிங் சாதனையை 14 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார். டேவிட் வோர்னர் 89 ஓட்டங்களும், கனடாவைச் சேர்ந் ஹிரால் பட்டேல் 88 ஓட்டங்களும், குவைத்தைச் சேர்ந்த அட்னான் இத்ரீஸ் 79 ஓட்டங்களும் அடித்துள்ளனர்.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை