142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸி மாற்று வீரர்

ஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய லாபஸ்சேக்னே வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.

லோர்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்டில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பின்றி சமநிலையில் முடிந்தது.

இந்த போட்டியின் 4-வது நாள் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடும்போது ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து கீழே சரிந்தார். சிறிது இடைவெளிக்குப்பின் மீண்டும் துடுப்பெடுத்தாடினார் .

ஆனால் ஐந்தாவது நாள் அவர் களம் இறங்கவில்லை. அவர் மூளையளர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவருக்குப் பதிலாக மாற்று வீரர் துடுப்பெடுத்தாடலாம் என போட்டிக்கான டாக்டரும், அவுஸ்திரேலிய அணி டாக்டரும் பரிந்துரை செய்தனர்.

அதன்படி அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடும் மாற்று வீரரான மார்னஸ் லாபஸ்சேக்னே களம் இறங்கி அரைசதம் அடித்து போட்டியை சமநிலை அடையச் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

இதன்மூலம் 142 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் துடுப்பெடுதாடி சாதனை படைத்த மார்னஸ் .

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை