'எங்கள் இல்லம்' புதிய வீடமைப்புத் திட்டத்தில் வறிய குடும்பங்களுக்கு 130 வீடுகள்

சப்ரகமுவ மாகாணத்தில் “எங்கள் இல்லம்” புதிய வீடமைப்புத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுவரும் வீடுகள் செப்டம்பர் மாதம் திறந்து வைக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய அல்மில்லகெட்டிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் “எங்கள் இல்லம்” புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் வீடுகளை கண்காணிப்பதற்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் பார்வையிட்ட சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் “எங்கள் இல்லம்” புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள் செப்டம்பர் மாதம் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்படும்.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் “எங்கள் இல்லம்” புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 130 வீடுகள் அமைக்கும்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி திட்டத்தின் மூலம் ஒரு இல்லத்தை அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை