அக்கரைப்பற்று வேலாமரத்துவெளி மஸ்ஜிதுன் நூறானிய்யாவின் 126வது கந்தூரி வைபவம்

அக்கரைப்பற்று நீத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வேலாமரத்துவெளி மஸ்ஜிதுன் நூறானிய்யா பள்ளிவாசலில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் கந்தூரி வைபவத்தின் 126ஆவது நிகழ்வு நேற்றுமுன்தினம் (24) சிறப்பாக இடம்பெற்றது.

இப்பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அஷ்ஷெய்க் சிக்கந்தர் வொலியுல்லாஹ்வின் பெயரால் ஒவ்வொரு வருடமும் இப்பள்ளிவாயலில் இக்கந்தூரி வைபவம் இடம்பெற்று வருகின்றது.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ.எல்.எம் காசிம் தலைமையில் நடைபெற்ற இக்கந்தூரி நிகழ்வில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அப்பிரதேசத்திலுள்ள தமிழ், சிங்கள மக்கள் உள்ளிட்ட தூர இடங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றமை இன நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக காணமுடிகின்றது.

இக் கந்தூரி வைபவத்தில் பல்லாயிரக்கான அயல்கிரம மக்களும் கலந்து கொண்டு உணவுப் பொதிகளைப் பெற்றுச் சென்றனர்.

அப்பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மிக ஒற்றுமையுடனும் சுதந்திரமாகவும் தத்தமது சமய, கலை, கலாசார விடயங்களிலும் ஏனைய மதத்தவர்களின் சமய, கலை, கலாசார நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஒத்தசையாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் ஒரு சிறந்த எடுதுக்காட்டாகும்.

 

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை