10 வருடங்கள் வவுனியாவை மறந்தவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதா?

சிந்தித்து செயற்படுங்கள்

வன்னி மாவட்டத்தை எதிர்வரும் ஐந்து வருடங்களில் பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மூவின மக்கள் அமைதியுடன் வாழும் வவுனியா மாவட்டத்தை பத்து வருடங்களாக மறந்து செயற்பட்ட அரசாங்கத்தை மீள ஆட்சிக்கு கொண்டுவருவதா?அல்லது ஐந்து வருடங்கள் வவுனியா மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்ட தற்போதைய அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதா? என மக்கள் சிந்தித்து செயற்படவேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஐந்து வருடங்களில் வன்னி மாவட்டத்தை பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், வவுனியா, அநுராதபுரம், மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அடுத்தவாரத்தில் மல்வத்து ஓயா திட்டத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்திக்காக 20.5 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் அதன் மூலம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடிந்துள்ளதில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு நெதர்லாந்தின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா ஆஸ்பத்திரி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க:

வவுனியாவை நாம் புறக்கணிக்கவோ மறக்கவோ இல்லை.

நாம் வவுனியா மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

நாம் எதிர்வரும் ஐந்து வருட காலங்களில் வன்னி மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

அசேல லியனகே

 

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை