100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சக்தி வித்தியாலய மாணவன் சாதனை

மட்டக்களப்பில் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமமான கணேசபுரம் கிராமத்தின் சக்தி வித்தியாலய மாணவன் பாஸ்கரன் சுலக்சன் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இம் மாணவன் இம்முறை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியிலே இச் சாதனையை படைத்து பாடசாலைக்கும் தனது கிராமத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தேசியமட்ட விளையாட்டுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை