அற்புத அனுபவத்தைத் தரும் SLT கார்ட்டிங் சவால் ஆரம்பம்

இலங்கையின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தீர்வு வழங்குநரான இலங்கை டெலிகாம் பி.எல்.சி, இலங்கை கார்டிங் சர்க்யூட்-பண்டராகாமவுடன் (SLKC) இணைந்து 'எஸ்.எல்.டி ஸ்பீடப் கார்டிங் சேலஞ்ச் 2019' ஐ ஊக்குவிக்கவுள்ளது.

வரவேற்புப் பெற்ற 'எஸ்.எல்.டி ஸ்பீட் அப்' திட்டத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பரவலான, கார்டிங் சவால் 13.07. 2019 அன்று பண்டாரகமவில் உள்ள இலங்கை கார்டிங் சர்க்யூட்டில் காலை 9 முதல் நடைபெறவுள்ளது. அணிகள் சவாலை ஏற்பதோடு வியக்க வைக்கும் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

பொழுதுபோக்கு அனுபவங்களை அதிகரிப்பதற்கான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக இருப்பதே SLT இன் முக்கிய நோக்கம், செயல்பாட்டு அடிப்படையிலான ஓய்வு அனுபவங்களுக்கான அதிகரித்துவரும் தேவையை நிவர்த்தி செய்வதோடு, விளையாட்டு சுற்றுலாவின் சந்தைப் பகுதியை விரிவுபடுத்துவதற்கும், இது தேசத்திற்கு நம்பிக்கைக்குரிய நன்மைகளுடன் வளர்ந்து வரும் துறையாகும்.

சர்வதேச தரங்களை உறுதிப்படுத்தும் முகமாக இந்த போட்டியானது, சிலோன் மோட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் இனால் ஒழுங்குபடுத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சைக்கிள் ஓடுவதில் இளைஞர்களுக்கு உள்ள ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை ரெலிகொம் பி.எல்.சியானது 2015 ஆம் ஆண்டில் 'SLT ஸ்பீட் அப் சைக்கிள் சவாரிய'வை த் தொடங்கியது. இது இளைஞர்களின் பெரு வரவேற்பைப் பெற்றது. இதே 'SLT ஸ்பீட் அப்' கருப்பொருளில், சதர்ன் எலியகந்த ஹில்ஸ் கிளைம்ப் 2019 அண்மையில் மாத்தறையில் 12 மோட்டார் சைக்கிள் போட்டி மற்றும் 21 மோட்டார் கார் போட்டி நிகழ்வுகளுடன் நடைபெற்றது. ஸ்பீட் அப் தொடர்களின் வெற்றி காரணமாகவே கார்டிங் சவால் நடத்தப்படுகின்றது.

இந்தச் சூழலில், இலங்கையில் வேக விளையாட்டுகளுக்கான சர்வதேச தரங்களை மேம்படுத்துவதில் SLT ஸ்பீடப் கார்டிங் சவால் செல்வாக்கு செலுத்தும். இலங்கை கார்டிங் சர்க்யூட்டில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அருமையான கேமிங் அனுபவத்தை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, இது நாட்டில் ஒரே மாதிரியான செயல்பாட்டு அடிப்படையிலான ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இடம் SLKC ஆகும்.

SLKC ஆனது கமிஷன் இன்டர்நேஷனல் டி கார்டிங் / ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி எல் ஆட்டோமொபைல் (CIK/FIA) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, இது தெற்காசியாவில் இந்த சான்றிதழைப் பெறும் சர்வதேச தரத்திற்கு ஒத்த ஒரே கார்டிங் தடம் என்பதற்கான சான்றாகும்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக