கல்முனை RDHS வெற்றிக்கிண்ண கிரிக்ெகட்: பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி சம்பியன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நடாத்தப்பட்ட கல்முனை RDHS வெற்றிக்கிண்ணம்-2019 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

கல்முனை RDHS வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் (21) நிந்தவூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அணிக்கு 11பேர் 10ஓவர்கள் மடடுப்படுத்தப்பட்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட மத்திய மற்றும் மாகாண நிருவாகத்தின் கீழ் உள்ள ஆதார வைத்தியசாலைகளின் கிரிக்கெட் அணிகள் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கிரிக்கெட் அணி உள்ளிட்ட 8அணிகள் பங்குகொண்டது. இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கிரிக்கெட் அணிகள் தெரிவாகியது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணித்தலைவர் பொத்துதவில் ஆதார வைத்தியசாலை அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பனித்தார்.

அதற்கினங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பொத்துதவில் ஆதார வைத்தியசாலை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர்களில் 3விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 126ஓட்டங்களைப் பெற்றனர். பொத்துதவில் ஆதார வைத்தியசாலை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிபான் ஆட்டமிழக்காது 62ஓட்டங்களையும், டொக்டர் ஜெசித்த 25 ஒட்டங்களையும் அந்த அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

127ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர்கள் நிறைவில் 7விக்கட்டுக்களை இழந்து 75ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆதில் 42ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இந்தப் போட்டியில் 51ஓட்டங்களினால் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டர். இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பொத்துதவில் ஆதார வைத்தியசாலை அணியின் சிபான் தெரிவானார். இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியின் ஆதில் தெரிவு செய்யப்பட்டார். இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தை பெற்ற பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் மற்றும் அணித்தலைவர் பிரசன்னா ஆகியோரிடம் வழங்கி வைத்தார்.

அத்துடன் இரண்டாமிடத்தினை பெற்ற அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணிக்கான கிண்ணத்தினை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எஸ்.அருள்குமரன் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றகுமான் மற்றும் அதன் அணித்தலைவரிடம் வழங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் விளையாடிய சகல வீரர்களுக்கும் அதிதிகளினால் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன. மேலும் இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றியமைக்காக சகல வைத்தியசாலை அணிகளுக்கும் ஞாபகக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், வீரர்களுக்கு சான்றுதழ்களும் வழங்க்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஏல்.அலாவுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எஸ்.அருள்குமரன் கௌரவ அதிதியாகவும், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மற்றும் பொத்துவில்,நிந்தவூர், திருக்கோவில், சம்மாந்துறை, ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் கிரிக்கெட் அணிகள் குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை