காப்பாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்த நவலோக்க வைத்தியசாலையுடன் PickMe

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் முன்னணி கம்பனியான PickMe ஆனது முன்னணி சுகாதார பராமரிப்பு சேவையை வழங்கும் நவலோக்க வைத்தியசாலையுடன் இணைந்து நோயளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு 30 வீத விலைக்கழிவை அதாவது வைத்தியசாலைக்கு அல்லது வைத்தியசாலையிலிருந்தான சகல சவாரிக்கும் 200 ரூபா வரையில் விலைக்கழிவை வழங்க முன்வந்துள்ளது. PickMe இன் சேவையை அதன் முத்திரையான பாதுகாப்பு, சௌகரியம், நம்பகத்தன்மை மற்றும் நியாயமான விலை என்பவற்றில் நோயாளர்களும், விருந்தினர்களும் பயன்படுத்த முடியும். இது தவிரவும் 2019 ஜுன் 9ஆம் திகதி முதல் ஜுலை வரை மேலும் விலைக்கழிவுகளுடன் போக்குவரத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். முன்னணி சுகாதார பராமரிப்பு சேவை வழங்குனரான நவலோக்க வைத்தியசாலை 1985ஆம் ஆண்டு முதல் தரமான சுகாதார வசதிகளை வழங்கி இத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. இலங்கையின் முன்னணி பல்துறை விசேட வைத்தியசாலையான நவலோக வைத்தியசாலை நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது.

“வைத்தியசாலைகளுக்குச் செல்லும்போது தரிப்பிடத்தில் வாகனத்துக்கான இடத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பலான பகுதிகளில் இடையூறான விடயங்களாக இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குனருடன் பங்காளராக இணைந்து எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த போக்குவரத்து தீர்வினை வழங்கவுள்ளோம்” என PickMe இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இசிர பெரேரா தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றின் ஊடாக முன்னேற்றத்தை ஏற்படுத்த PickMe அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பயணத் தீர்வை வழங்குவதே எமது குறிக்கோளாகும். ஏனைய நன்மைகளை வழங்கும் அதேநேரம், வைத்தியசாலைக்குச் செல்லும்போது தொந்தரவு குறைந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டணத்தில் சேவையை வழங்கும் நோக்கிலேயே நவலோக்கவுடன் நாம் பங்கான்மையை ஏற்படுத்தினோம். இந்தப் பங்கான்மையின் ஊடாக நவலோக வைத்தியசாலைக்குச் செல்ல விரும்புவர்கள் PickMe இன் ஊடாக தமக்குத் தேவையான, சூழலுக்கு ஏற்ற வகையில் முச்சக்கரவண்டி, நனோ, சிறிய கார், கார் அல்லது வான் என்பவற்றை வசதிக்கேற்ப தெரிவுசெய்ய முடியும்” என்றார்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை