களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மைலோ வலைப்பந்தாட்டம்

களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மைலோ வலைப்பந்தாட்ட போட்டி கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை களுத்துறை வேர்ணன் யூ பெர்ணான்டோ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இலங்கை பாடசாலை வலைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டிலும் மேல் மாகாண கல்வி அமைச்சின் கண்காணிப்பிலும் நெஸ்லே நிறுவனத்தின் அனுசரணையுடனும் நடைபெற்ற இப் போட்டியில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 35 பாடசாலை அணிகள் 13,15,17 மற்றும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் போட்டியிட்டதுடன் வழமைபோல் களுத்துறை மாவட்டத்தில் இருபெரும் பாடசாலைகளான களுத்துறை மகளிர் தேசியப் பாடசாலை அணியும் களுத்துறை திருக்குடும்ப கன்னியர் மட அணியும் தத்தமது வலைப்பந்தாட்ட கோட்டைகளைத் தக்கவைத்துக் கொண்டன.

இதன்போது 13 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளின் இறுதிப் போட்டியில் களுத்துறை திருக் குடும்ப கன்னியர் மட அணி களுத்துறை மகளிர் தேசியப் பாடசாலை அணியை 7-–4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதுடன் 15 வயதுக்கு கீழ்பட்ட பிரிவிலும் களுத்துறை மகளிர் தேசியப் பாடசாலை அணியை 14-–10 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் வெற்றி கொண்டது.

 மேலும் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் களுத்துறை மகளிர் தேசியப் பாடசாலை அணி 33- –22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் களுத்துறை திருக் குடும்ப கன்னியர் மட அணியை தோல்வியடை செய்ததுடன், 19 வயதுக்கு கீழ்பட்ட பிரிவில் களுத்துறை மகளிர் தேசியப் பாடசாலை அணி பாணந்துறை நல்லாயர் கன்னியர் மட அணியை முப்பத்து மூன்று புள்ளிகளுக்கு நான்கு புள்ளிகள் என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகு வெற்றியை பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

களுத்துறை சுழற்சி நிருபர்

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை