சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவிகள்

மலையக மக்களுக்கு சேவை செய்வதில் அரசியல்வாதிகள் போன்று,அதிகாரிகளும் முன்வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார். 2561 சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் (20) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு பேசிய அவர், வறுமைக் கோட்டுக்கு கீழ்பட்டோர் மலையத்திலே அதிகம் வாழ்கின்றனர். கடந்த முறை 500 பேருக்கே நிதியுதவிகள் வழங்கப்பட்டன.இம்முறை எமது அயராத முயற்சியாலும் அதிகாரின் உழைப்பாலும் 2561 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றையும் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்காமல் அரச உயர் அதிகாரிகளாக வருவதற்கு எமது பட்டதாரிகள் முயற்சிக்க வேண்டும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சமதளத்தில் பயணிக்கும்போதே அபிவிருத்தியை இலகுவாக அடைய முடியும். இலங்கை பொது நிர்வாக போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மலையக இளம் பட்டதாரிகள் இப்பரீட்சையில் தோற்றி வெற்றிபெற வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை