அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதாக ஈரான் அறிவிப்பு

அணு ஆற்றல் உற்பத்தியை குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015இல் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை மீறி விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டதாக அந்நாடு கூறியுள்ளது.

இன்னும் ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் கடமைகளை சரியாக செய்ய தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி ஓராண்டு நிறைவடைந்த அன்று, ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் மற்ற நாடுகளான சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஈரான் 60 நாட்கள் காலக்கெடுவை நிர்ணயித்தது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து ஈரானை காப்பாற்றவே இந்த கெடு கொடுக்கப்பட்டது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை