ஜனாதிபதியை தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும்

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். எனவே அவரை விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அழைக்க வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் உரையாற்றுகையில் குறுக்கீடு செய்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் குறிப்பிட்ட அவர்,19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும்.அவருக்கு பாராளுமன்றத்தில் தனியான ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் ஜனாதிபதிக்கு பொறுப்பு கூறத் தேவையில்லை. எனவே அவரை விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் தெரிவுக்குழுவுக்கு வருவதை நிராகரிக்க முடியாது. அவரை அழைக்குமாறு எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை