ஐரோப்பாவில் மீண்டும் வெப்ப அலை பாதிப்பு

மேற்கு ஐரோப்பாவில் இந்த பருவத்தில் இரண்டாவது வெப்ப அலை தாக்கியிருக்கும் நிலையில், பிரான்ஸ் நகரான போர்டெக்ஸில் சாதனை அளவுக்கு வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு நகரான இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை 41.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதோடு 2003 ஆம் ஆண்டு பதிவான சாதனை அளவான 40.7 செல்சியஸ் வெப்பநிலையை முறியடிப்பதாக இது உள்ளது. பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உட்பட இந்த வாரம் ஐரோப்பா எங்கும் சாதனை அளவு வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை அவதானிப்பாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் அம்சமாகவே இந்த வெப்ப அலை உருவாகி இருப்பதாக உலக வானிலை அமைப்பின் பேச்சாளர் கிளயர் நூலிஸ் குறிப்பிட்டுள்ளார். “நாம் ஜூன் மாதத்தில் பார்த்தது போன்று இது தொடர்ந்தும் இடம்பெறுவதாக உள்ளது. அது முன்கூட்டியே ஆரம்பித்திருப்பதோடு அதிக தீவிரமடைந்து வருகிறது” என்று அவர் எச்சரித்தார்.

பிரான்ஸில் தற்போது செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, இது இரண்டாம் நிலை உயர் எச்சரிக்கையாகும்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை