மரண தண்டனை அவசியம் நடைமுறைப்படுத்தக்கூடாது

குற்றம் இழைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"தண்டனை அவ்வாறே இருக்க வேண்டும். அதில் மாற்றங்கள் செய்யத் தேவையில்லை. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது," என்றும் அவர் கூறினார்.

பிலியந்தலையிலுள்ள விகாரைக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவரிடம் மரண தண்டனை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது 1970 களில் இருவர் தூக்கிலிடப்பட்டதுடன் மரண தண்டனை நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கலாமென ஜனாதிபதி நினைக்கின்றார். அது அவருடைய கருத்து. தற்போது இவ்விடயம் தொடர்பில் பாரிய விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. எனினும் மரண தண்டனை தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை