பாடசாலை மாணவர்களுக்கு பொலிக்அசிட் அடங்கிய அரிசி வழங்கல்

பொலிக்அசிட் அடங்கிய இரும்புச்சத்து கொண்ட அரிசியினை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை கமத்தொழில் அமைச்சும்,தேசிய உணவு ஊக்குவிப்பு சபையும் ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தமுத்தேகம கல்வி வலயத்திலுள்ள 64 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கும், கெகிராவ கல்வி வலயத்தைச் சேர்ந்த 100 பாடசாலைகளைச் சேர்ந்த 12,420 மாணவர்களும் கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பீ.ஹரிசன் தலைமையில் (27) நடைபெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் போசணை குறைபாட்டால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தினாலும்,பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.இவர்களில் பெரும்பாலானோர் இரும்பு சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக அனுராதபுரம்,கலன்பிந்துனுவெவ,கெப்பிதிகொல்லாவ ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதன் பின்னர் பாலர் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

 

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

 

 

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை