கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை புனிதர்களாக்க நடவடிக்கை

மன்னார் தோட்டவெளியில் மறைசாட்சிகளாக இரத்தம் சிந்தியவர்களை புனிதர்களாக்குவதற்கு அவர்களின் சில எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் 475ஆவது விழா தோட்டவெளி வேதசாட்சிகளின் திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத் தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ சில்வா அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ் நினைவு நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் கலந்து கொண்டு மறையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்வு இன்றும் உலகம் முழுவதும் தொனித்துக் கொண்டிருக்கின்றது.

கிறிஸ்து உயிர்ப்பு தினத்தன்று ஆலயங்களில் இறைவனை புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள்.

இதனால் இன்று அவர்கள் மறைசாட்சிகள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் பெயர் விலாசம் மற்றும் இவர்களின் உறவினர்களின் விபரங்கள் எல்லாம் திரட்டப்பட்டு வருகின்றன.

இத் தாக்குதல்களால் எமது நாட்டுக்கு பல விதத்திலும் பெரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம், மக்கள் ஆலயங்கள் செல்லுவதில் மட்டுமல்ல வெவ்வேறு விதத்திலும் எமது நாட்டை பாதிப்படைய செய்துள்ளது.

475 ஆண்டுகளுக்கு முன் 600க்கு மேற்பட்ட கத்தோலிக்கர் தோட்டவெளியாகிய இவ் விடத்தில் கொலை செய்யப்பட்டு இரத்தம் சிந்தி மறை சாட்சியானார்கள்.

இப்பொழுது எமது திருச்சபை மறைசாட்சிகளாக இறந்தவர்களை புனிதர்களாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தலைமன்னார் நிருபர்

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை