பலத்த காற்றுடன் மழை தொடரும் சாத்தியம்

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாடு முழுவதும் குறிப்பாக, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழை நிலையும் இன்றையதினமும்  தொடருமென்று  எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

நாடு முழுவதும்குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர்  பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவானபலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.  

எனவே, மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Fri, 07/19/2019 - 08:17


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக