வென்னப்புவ ஜோசப் வாஸ், குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயம் சம்பியன்களாக தெரிவு

சமபோஷ அனுசரணையில் இடம்பெறும் 2019 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் வடமேல் மாகாணத்தில் ஆண்கள் பிரிவின் சம்பியன்களாக வென்னப்புவ ஜோசப் வாஸ் மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இரண்டாமிடத்தை சிலாபம் சென். மேரிஸ் வித்தியாலயம் தனதாக்கியிருந்தது. மூன்றாமிடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலயம் தனதாக்கியது. பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயமும், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே வென்னப்புவ திருக்குடும்ப கன்னியர் பாடசாலையும் குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலையும் வெற்றியீட்டியிருந்தன.

சமபோஷ வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் 473 பாடசாலைகளிலிருந்து 2450 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்கள் 116 போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகள் ஜுலை 17 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதிவரை வென்னப்புவ அல்பர்ட். எஃவ்.பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது வடமேல் மாகாணத்தின் ஆண்கள் சிரேஷ்ட பிரிவின் வெற்றியாளர்களாக சிலாபம் சென். மேரிஸ் வித்தியாலயமும்,பெண்கள் பிரிவின் வெற்றியாளர்களாககுளியாப்பிட்டியமத்தியமகாவித்தியாலயம் வெற்றியீட்டியிருந்தன. ஆண்கள் கனிஷ்ட பிரிவின் வெற்றியாளராக குருநாகல் மலியதேவ வித்தியாலயமும்,பெண்கள் பிரிவின் வெற்றியாளர்களாக குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலையும் வெற்றியீட்டியிருந்தன.

போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருது குருநாகல் சேர். ஜோன் கொதலாவெல மகாவித்தியாலயத்தின் டி.எம். போகொட எனும் மாணவருக்கு வழங்கப்பட்டதுடன்,சிறந்த வீராங்கனைக்கான விருது இப்பாகமுவமத்தியமகா வித்தியாலயத்தின் பி.பி.ஐ.என். பல்லேகம வெற்றியீட்டியிருந்தார்.

வடமேல் மாகாணத்தின் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன்,சமபோஷ அனுசரணையில் ஊவா,வடமத்திய,கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகளின் வெற்றிகரமான ஒரு அங்கமாக அமைந்திருந்தது.

சமபோஷ முழு அனுசரணையுடன் வலயகல்வி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் நான்கு மாகாணங்களில் வெவ்வேறானவகையில் ஜுலை மாதம் முழுவதிலும் இடம்பெறுகின்றன.

இந்தவிளையாட்டுபோட்டிகள் தொடர்பாகவடமேல் மாகாண உதவி கல்விபணிப்பாளர் எச்.கே.எம். ரூபதிலக குறிப்பிடுகையில்,'வடமேல் மாகாணத்தில் மூன்றாவது தடவையாக இந்தவிளையாட்டுபோட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விளையாட்டுவீரர் எனும் பெருமையை கட்டியெழுப்பிக் கொள்வதுடன்,அந்த பெருமையினூடாக இந்தநாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் சர்வதேசமட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கிட சமபோஷ தேசியமட்டத்தில் பங்களிப்பு வழங்குவது பெரிதும் வரவேற்கத்தக்கது.'என்றார்.

இந்த தேசிய பங்களிப்பு தொடர்பில் பிளென்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,'நாம் 10 வருடகாலமாக,பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டிகள்,மலையக சிறுவர்கள் மற்றும் கனிஷ்ட விளையாட்டுபோட்டிகள், இராணுவ மெய்வல்லுநர் போட்டிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவிளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணைகளை வழங்கிவருகின்றோம். இதனூடாக சர்வதேச தரத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் நாம் பங்களிப்பு வழங்குகின்றோம்.'என்றார்.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை