ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் அலுவலகத்தின் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் அம்ருல்லாஹ் சலேஹ்வின் காபுல் அலுவலகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர். ஆப்கானின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக பிரசாரம் ஆரம்பித்து முதல் நாளிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியுடன் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சலேஹ் இந்தத் தாக்குதலில் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அந்த அலுவகத்திற்கு அருகல் உள்ள கார் தரிப்பிடத்தில் தற்கொலை தாரி குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கட்டிடத்திற்குள் பல ஆயுததாரிகளும் ஊடுருவில் இருப்பதோடு பாதுகாப்பு படையினருடனான ஆறு மணி நேரம் நீடித்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது 150 பொதுமக்கள் அந்தக் கட்டடத்திற்குள் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நாட்டில் அமைதி திரும்பும் என்று ஜனாதிபதி அஷ்ரப் கானி முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த போராட்டக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தேர்தல் ஏற்கனவே இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை