அமெரிக்காவின் மாநாட்டில் பங்கேற்ற பலஸ்தீனர் கைது

பஹ்ரைனில் அமெரிக்கா தலைமையிலான பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பலஸ்தீன வர்த்தகரை பலஸ்தீன அதிகார சபை கைது செய்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹப்ரோன் நகரைச் சேர்ந்த சாஹ் அபூ மயாலா என்ற வர்த்தகரே பலஸ்தீன உளவுப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதி முயற்சியின் ஓர் அங்கமாக பலஸ்தீனத்திற்கான பொருளாதாரத் திட்டம் ஒன்றை வெளியிடுவதற்காகவே பஹ்ரைனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜரட் குஷ்னரினால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

எனினும் இந்த மாநாட்டை பலஸ்தீன தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இந்த மாநாட்டுக்கு எதிராக பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது உட்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடுகளை அடுத்து ஓர் ஆண்டுக்கு முன் அமெரிக்காவுடனான உறவுகளை பலஸ்தீன நிர்வாகம் துண்டித்தது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை