யோகாசன கலை பயிற்சி பெற்ற அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட யோகாசனம் அடிப்படை பயிற்சி நெறி மற்றும் பல்கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்க்கும் நிகழ்வு திருஞானவாணி அறநெறிப் பாடசாலையின் தலைவர் ஆ.கணேசமூர்த்தி தலைமையில்திருஞானவாணிமுத்தமிழ் இசை மன்றத்தில்இன்று (21) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அறநெறி மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அறநெறி உரையாற்றிய பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், கல்வி என்பது இன்றைய காலத்தின் முக்கிய ஒழுக்க கல்வியாக முதன்மைப்படுத்தப்பட வேண்டியிருப்பதுடன் நாட்டில் அனைவரும் கல்வி அறிவு பெற்று இருந்த போதிலும் ஓழுக்க கல்வி முறையாக போதிக்கப்படாமையே மனிதர்களின் பிரழ்வான நடத்தைக்கும் துன்பமான சூழ்நிலைக்கும் காரணமாக அமைந்திருப்பதாகவும் இதனை அறநெறிக் கல்வியின் ஊடாகவே ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இதனையே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்து வரும் நிலையில் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை அறநெறிக்கு அனுப்புவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், இந்த சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந், அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரெத்தினம், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.விநாயகமூர்த்தி திருஞானவாணி அறநெறிப் பாடசாலை அதிபர் கலாபூசணம் செல்வி ஆ.பரமேஸ்வரி மற்றும் அறநெறி ஆசிரியைகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

Sun, 07/21/2019 - 15:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை