வொஷிங்டனில் திடீர் வெள்ளம்: வெள்ளை மாளிகை மூழ்கியது

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி கடந்த திங்களன்று ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வீதிகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். மழைநீர் வழிந்தோடி செல்ல வழியில்லாததால், இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வீதிகளில் சென்ற கார்கள் இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கி நின்றது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆர்லிங்டனில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் மேற்கூரை வழியாக தண்ணீர் கொட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கனமழை, திடீர்வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் வெள்ளை மாளிகையிலும் பதிவாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் தரைகீழ் தளத்தில் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. திடீர்வெள்ளப்பெருக்கால் யாருக்கும் காயமோ வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை