இனவாதத்தை தூண்டும் எந்த சக்திகளையும் ஆதரிக்க முடியாது

இனவாதத்தை தூண்டும் எந்த சக்திகளையும் ஆதரிக்க முடியாதெனத் தெரிதிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாசா, நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டுமானால் இனங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வு, நல்லிணக்கம் கட்டியெ ழுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பிலே அவர், இதைத்தெரிவித்தார்.இனவாதத் தாக்குதல்களால் சேதமுற்ற மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலை புனரமைக்க, நிதியுதவி வழங்கிய அமைச்சர், அங்கு இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பில் உரையாற்றினார்.இதில் தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான எட்வாட் குணசேகர, ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது: மினுவாங்கொடை பிரதேச முஸ்லிம்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எந்த மதங்களைச் சார்ந்தோரானாலும் இலங்கையின் மக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இனம், மதம், மொழி வேறுபாட்டை புறந்தள்ளிச் செயற்பட்டால் எந்தச் சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.புத்த பெருமான் மனித குலத்தை நேசித்தவர். எந்த இனத்தவரையும் இனவாதக் கண்கொண்டு பார்க்க முடியாது. பௌத்தர், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதை பௌத்தம் ஆதரிக்கவில்லை என்றார்.

எம்.ஏ.எம்.நிலாம்

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை