மருந்து மாபியாவை கட்டுப்படுத்த முடிந்தமை அரசுக்கு கிடைத்த வெற்றி

நோயாளர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய மருந்து மாபியாவை கட்டுப்படுத்த முடிந்திருப்பது அரசாங்கத்துக்குக் கிடைத்த பாரியதொரு வெற்றியென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். 

அமெரிக்கா கூட ஏற்றுக்கொண்ட தரத்திலான மருந்துகள் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா முதல் 48ஆயிரம் ரூபாவரை குறைப்பதற்கு முடிந்துள்ளது. அரசாங்கம் கொண்டுவந்த புதிய மருந்துக் கொள்கைக்கு அமையவே இது சாத்தியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தயாசிறி ஜயசேகர எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, மருந்துப் பொருட்களை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்தவித விவாதமும் இன்றி பாராட்டப்படவேண்டிய செயற்பாடாகும் என்றும் தயாசிறி ஜயசேகர எம்பி சுட்டிக்காட்டினார். இந்த விலை குறைப்பினால் இரண்டு இலட்சத்து 80ஆயிரம் ரூபாவாகவிருந்த மருந்து ஒரு இலட்சத்து 15ஆயிரம் ரூபாவாகக் குறைந்துள்ளது.

இது மதிக்கப்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தளவுக்கு மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு கிடைத்திருப்பது அரசாங்கத்துக்கான வெற்றியாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.    

மகேஸ்வரன் பிரசாத் 

Sat, 07/13/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை