வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 சிறுபோகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளை துரிதப்படுத்த பிரதேச மட்டத்தில் நிவாரண மதிப்பீட்டு குழுக்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலில் பிரதேச மட்ட நிவாரண குழுக்களில் அவ்வப்பகுதி பிரதேச செயலாளர்கள் தலைமையில் விவசாயம்,விவசாய விரிவாக்கல்,விவசாய காப்புறுதி, நீர்ப்பாசன திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் அடங்கியதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல்,சோளம்,மிளகாய், பெரிய வெங்காயம்,உருளைக்கிழங்கு ஆகிய பயிர் நஷ்டங்களுக்கே புதிய சுற்று நிருபத்தின்படி நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களப் பணிப்பாளர் வை.வீ.இக்பால் தெரிவித்தார்.

இந்த நஷ்டஈட்டினை உரமானியம் பெற்று ஆரம்ப பயிர்ச்செய்கை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கே இந்த நஷ்ட ஈட்டினை பெற தகுதி பெற்றுள்ளனர். தத்தமது கமநலசேவைகள் கேந்திர நிலையங்கள் ஊடாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது நஷ்டங்களை எழுத்துமூலம் அறுவடைக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்படுகின்றது. பிரதேச நிவாரண குழுவால் சேகரிக்கப்படும் நஷ்டஈடுகள், மாவட்ட நிவாரண குழுவின் சிபார்சின் அடிப்படையில் விரைவாக நஷ்ட ஈடுகளை வழங்க விவசாய ,நீர்ப்பாசன ,மீன்பிடி, நீரியவளங்கள் அமைச்சு தயார் நிலையிலிருப்பதாக அமைச்சர் எச்.பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

(மட்டக்களப்பு சுழற்சி நிருபர் )

 

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை