அநு./ நாச்சியாதீவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு

அ/ நாச்சியாதீவுப் பகுதியில் மேற் கொள்ள தீர்மானித்துள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆரம்பித்து வைத்தார்.கடந்த ஞாயிறு ( 14 ) நாச்சியாதீவுக்கு விஜயம் செய்த அவர், அங்கு பல அபிவிருத்தி வேலை திட்டங்களை ஆரம்பித்து வைத்ததோடு, ஏற்கனவே காபட் இடப்பட்டு செய்து முடிக்கப்பட்ட நாச்சியாதீவு புதிய நகர் பாடசாலை வீதி, மையவாடி வீதி, கெக்கிராவ - அநுராதபுரம் பிரதான வீதியுடன் இணையும் நாச்சியாதீவு இஹலவெவ வரையிலான வில்லு வீதி ஆகியவற்றை திறந்து வைத்தார். நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு தற்போது அத்தியாவசியமாக தேவைப்படும் பல அபிவிருத்தி வேலை திட்டங்களையும் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

நாச்சியாதீவு ஜும்ஆப் பள்ளிவாசலின் பாதுகாப்பு நுழைவாயில் ஒன்றை கட்டிக் கொடுப்பதற்கான நிதி உதவியை வழங்கி,நிர்வாக தலைவர் ஏ.சி.ஆப்தீன் தலைமையில் நடை பெற்ற அதற்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து சிறப்பித்தார். இவ் விஜயத்தின் போது, திறப்பனை பிரதேச சபையின் உப- தலைவர் முஜிபுர் ரஹ்மான், தேசமான்ய ஏ.ஆர்.எம்.தாரிக், திறப்பனை பிரதேச சபை உறுப்பினர் அன்வர் சதாத் ( பஸ்மி), உட்பட அரசியல் வாதிகள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் இவ் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.

திறப்பனை தினகரன் நிருபர்

 

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை