ஹொங்கொங் சர்ச்சைக்குரிய சட்டம் ‘பயனற்றதாகிவிட்டது’

தலைமை நிர்வாகி கேரி லாம்

ஹொங்கொங்கில் வழக்குகளை எதிர்நோக்குவோரை விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்க வகைசெய்யும் சட்டம் பயனற்றதாகிவிட்டதாய்த் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை அறிவித்தார்.

சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் முற்றிலும் தோல்வியில் முடிந்ததாய் அவர் குறிப்பிட்டார். பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கத்துக்கும் தமக்கும் சற்று அவகாசம் அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்னர், சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க மட்டுமே லாம் ஒப்புக்கொண்டிருந்தார். ஹொங்கொங்கில் இந்தச் சட்டத்திற்கு எதிராகக் கடந்த மாதம் ஆரம்பித்த ஆரப்பாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டின.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கலகத் தடுப்புக் பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு பிரச்சினை முற்றியது.

முன்னாள் பிரிட்டன் காலனியான ஹொங்கொங் சீனாவின் ஓர் அங்கமாக இருந்தபோதும் “ஒரு நாடு, இரு அமைப்பு” என்ற முறையில் அந்தப் பிராந்தியத்திற்கு குறிப்பிடத்தக்க சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது.

அங்கு சீன பிரதான நிலத்தில் இருந்து விலகில் தனி நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அமைப்பு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை