இலங்கைக்கான உதவிகளை உலக வங்கி விஸ்தரிக்கும்

மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிக்கப்போவதாக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (HartwigSchafer) தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

திடீர் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயத் துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை, மீள்பிறப்பாக்கி மின்சக்தி, கிராமிய பிரதேசங்களில் குளங்களை புனரமைத்தல்,ஆகியன இந்த புதிய செயற்திட்டங்களில் உள்ளடங்குகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஹார்ட்விங் சேபர், இலங்கைக்கு தொடர்ச்சியாக சர்வதேச கடன் உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நிதிஉதவிகள் பெற்றுத்தரப்படும்.இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தை குறைக்கவும் உதவப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பிற்காக, உலக வங்கிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முகங்கொடுத்த சவால்களை வெற்றிகொள்ள உலக வங்கிய நிதியுதவியையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இந்த துன்பியல் நிகழ்விற்கு பின்னர் இலங்கை துரிதமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவது, குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹார்ட்விங் சேபர், சகல சந்தர்ப்பங்களின் போதும் சர்வதேச சமூகம் இலங்கையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் வலய சிரேஷ்ட முகாமையாளர்களின் மாநாட்டுக்கு தலைமை தாங்க,இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் உலக வங்கி தனது வருடாந்த கூட்டத்தொடரை நடாத்துவதற்கு இலங்கையை தெரிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். (ஸ)

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை