தேயிலை, மிளகுக்கான கேள்வியை அதிகரித்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அரசின் கடமை

தேயிலை, மிளகு உற்பத்தியில் காணப்படும் விலை தளம்பல் காரணமாக மக்கள் பெருமளவு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டினுள் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இணையாக தேயிலை மற்றும் மிளகு உற்பத்திகளுக்கு விசேட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதுடன் அவற்றுக்கு ஒழுங்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமையாகுமென துறைமுகங்கள் ,கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

தெனியாய பிரதேசத்தில் (22) முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டு உரையாற்று கையிலேயே அமைச்சர் இக் கருத்தை வெளியிட்டார்.

பிட்டபெத்தர பிரதேச செயலக அலுவலகத்தில் ரூ.1,400 மில். செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ஐந்து மாடி நிர்வாக கட்டடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று முற்பகல் அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் சாகல தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எம்முடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எங்கள் தேயிலை உற்பத்தியும் மிளகு உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளது. தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையும் பொழுது உங்களைப் போன்றே எனக்கும் எமக்கும் நன்றாக வலிக்கின்றது. 2015ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியமைக்கும் பொழுது தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை எதிர்க்கொண்டிருந்தது. தேயிலை கொழுந்தின் விலை ரூபாய் 60 ற்கும் குறைவாகவே இருந்தது. பல கஷ்டங்களுக்கு மத்தியிலே செலவுகளை சமாளிக்க நேரிட்டது. உரமிட்டு கொழுந்துகளை பறிக்கும் நிலைக்கும் கொண்டுவருவதற்கே ஏற்படும் செலவையே ஈடுசெய்ய இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலை காரணமாக அரசாங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டது. எங்களுடைய தேயிலை தொடர்பில் சர்வதேசத்திற்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தி எங்கள் தேயிலைக்கான விலையை அதிகரிப்போமென நாம் மக்களுக்கு உறுதிமொழி வழங்கினோம்.

இவ்வேலைத்திட்டம் நடைமுறையிலிருக்கும் வரையில் நாம் மக்களுக்கு நிலையான விலையொன்றை வழங்கினோம். எம்மால் சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலையை அதிகரிக்க முடிந்தது. ஒரு சில மாதங்களுக்கே நிலையான விலை முறையை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. விலை என்பதையும் தாண்டியது. ஒரு சில நாட்களில் மாத்திரம் விலை குறைவடைந்தது.

மீண்டும் ஏற்றங்கண்டது. தற்சமயம் விலை குறைவடைந்துள்ளமையால் தொடர்ச்சியாக விலை வீழ்ச்சியடையுமோ? என மக்கள் அச்சமடைந்துள்ளார்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை