எகிப்து பண்டைய சிற்பத்தை மீட்க இன்டர்போலின் உதவி

3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த டுட்டன்காமன் கலைப்பொருளைத் தேடித்தர இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாருக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

எகிப்தின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அந்த முகச் சிற்பம் இம்மாத ஆரம்பத்தில் லண்டனில் உள்ள கிறிஸ்டிஸ் ஏலக் கூடத்தில் விற்கப்பட்டது.

28.5 சென்டிமீற்றர் சிற்பத்தைக் கிட்டத்தட்ட 6 மில்லியன் டொலருக்கு அடையாளந்தெரியாத ஒருவர் வாங்கினார். அந்த ஏலக் கூடத்தில் நடத்தப்பட்ட மிக சர்ச்சைக்குரிய ஏலங்களில் இதுவும் ஒன்றாகும்.

விற்பனை இடம்பெற்ற ஒரு வாரத்துக்குள்ளாக, முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அத்தகைய கலைப்பொருட்களைத் தேட சுற்றறிக்கை விடுக்கும்படி இண்ட்டர்போல் அமைப்பை எகிப்து கேட்டுக்கொண்டது.

அவசரக் கூட்டம் நடத்திய அந்நாட்டின் கலைப்பொருள் மீட்புக்கான தேசியக் குழு, அரசாங்க வழக்கறிஞர்கள் அந்தக் கோரிக்கையை விடுத்திருப்பதாகக் கூறியது.

கலைப்பொருட்கள் எகிப்திலிருந்து சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாமல் அவை விற்கப்படுவது குறித்து அந்தக் குழு மிகுந்த அதிருப்தியை வெளியிட்டது.

அந்த விவகாரத்தால் எகிப்து மற்றும் பிரிட்டன் இடையிலான கலாசார உறவுகள் பாதிக்கப்படலாம் என்றும் அது எச்சரித்தது.

இந்த சிற்பம் 1970களில் வடக்கு லக்சோரில் உள்ள பண்டை தேவாலயத்தில் இருந்து திருடப்பட்டதாக எகிப்து வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை